#Breaking || இரட்டை இலை சின்னம்.. அவசரமாக அழைத்த ஈபிஎஸ் - சேலம் விரையும் சிவி சண்முகம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி கட்சிகளை இறக்கிவிடும் என சொல்லப்பட்ட நிலையில், நேரடியாகவே கோதாவில் இறங்குகிறது அதிமுக. ஈபிஎஸ் தரப்பு அதற்கான வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளது. இருப்பினும், இரட்டை இலை சின்னம் பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. ஏனென்றால், ஓபிஎஸ் தான் தான் அதிமுக என்று சொல்வதால் சின்னம் முடக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
ஆகவே இந்தச் சவாலைச் சமாளிக்க ஈபிஎஸ் அவசர ஆலோசனையில் இறங்கியுள்ளார். குறிப்பாக சட்ட நடவடிக்கையின் மூலம் இரட்டை இலையை மீட்க திட்டமிட்டுள்ளார். சேலத்தில் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். தற்போது முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், சேலத்திற்கு சென்று கொண்டிருக்கிறார். ஏற்கெனவே அதிமுக பொதுக்குழு வழக்குகள் இவரின் மேற்பார்வையில் தான் நடந்தது. ஆகவே சி.வி.சண்முகத்தின் ஆலோசனைப்படி இரட்டை இலையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.