அதானி துறைமுக ஒப்பந்த ஊழியர் கடலில் குதித்து தற்கொலை - சென்னையில் அதிர்ச்சி
காட்டுப்பள்ளி துறைமுக விரவாக்கத்துக்காக, 2009ஆம் ஆண்டு 140 பேருக்கு தற்காலிக பணி வழங்கப்பட்ட நிலையில், பணி நிரந்தரம் கோரி போராட்டங்கள் நடத்தியதாக, 12 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த காட்டுப்பள்ளி மீனவர் ஒருவர், மீன் பிடிக்க சென்ற போது, கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதை கண்டித்த காட்டுப்பள்ளி கிராம மீனவர்கள், துறைமுக நுழைவாயில் முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், பழவேற்காடு செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, போலீசார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
Next Story