எல்பின் மோசடி... நடிகர் ஆர்.கே சுரேஷுக்கு பங்கு..? - வெளியான பகீர் தகவல்

x

எல்பின் மோசடி... நடிகர் ஆர்.கே சுரேஷுக்கு பங்கு..? - வெளியான பகீர் தகவல்

திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த

எல்பின் நிறுவனம், பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக

சுமார் 7 ஆயிரம் பேரிடம் 6 ஆயிரம் கோடி வரை மோசடி செய்ததாக பொருளாதார குற்றபிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக இந்த நிறுவனத்தின் இயக்குனரும் பாஜக பிரமுகருமான ராஜா உட்பட 18 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.இந்த நிலையில் ராஜாவும், ஆர் கே சுரேஷும் அடிக்கடி சந்தித்து பேசியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே பணபரிவர்த்தனை நடைபெற்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததன் காரணமாக, ஆர் கே சுரேஷூக்கு சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே

ஆருத்தரா மோசடி வழக்கில் நடிகர் ஆர் கே சுரேஷூக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு சம்மன் அனுப்பப்பட்டது குறிப்பிடதக்கது.


Next Story

மேலும் செய்திகள்