சூடு பிடிக்கும் ஆவின் மோசடி வழக்கு... உச்சநீதிமன்றம் போட்ட புதிய உத்தரவு

x
  • ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் வழங்கப்பட்ட ஜாமீனை நீட்டிக்கவும், தளர்த்தவும் கோரி, முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவை, உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
  • அப்போது, இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க டிஜி.பி. பரிந்துரைத்துள்ளதாகவும், ஆளுநரிடம் ஒப்புதல் பெற 6 மாதமாகும் என்றும் தமிழக அரசு சார்பில் அவகாசம் கோரப்பட்டது.
  • இதையடுத்து, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு வழங்கிய ஜாமீனை 6 மாதங்கள் வரை உச்சநீதிமன்றம் நீட்டித்தது.
  • தமிழ்நாட்டுக்கு வெளியே செல்லும் பட்சத்தில், அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்