தம்பிக்கு உருக்கமான கடிதம் எழுதிவிட்டு கணவரை கொடூரமாக கொன்ற மனைவி

x

காஞ்சிபுரத்தில், கருத்து வேறுபாடு காரணமாக, கணவனை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு, மனைவியும் தற்கொலை செய்து கொண்டார்.

பல்லவர் மேடு பகுதியை சேர்ந்த சந்தானம், அவரது மனைவி வேண்டா ஆகியோர் உயிரிழந்து கிடப்பதாக, சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், தம்பதியின் உடலை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஆறு வயது குழந்தையுடன் வசித்து வந்த வேண்டா என்ற பெண்ணை, கட்டிட மேஸ்திரி சந்தானம் என்பவர் இரண்டாவதாக திருமணம் செய்த நிலையில், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது தெரியவந்தது. அதன்படி, தம்பதிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட போது, சந்தானத்தின் தலை மீது கல்லை போட்டும், கத்தியால் கழுத்தை அறுத்தும் கொலை செய்தது கண்டறியப்பட்டது. பின்னர், தனது குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறு சகோதரருக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, வேண்டாவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது


Next Story

மேலும் செய்திகள்