வீட்டில் அதிகாலையில் கேட்ட அலறல் சத்தம்.. சிறுமி மீது இடிந்து விழுந்த சுவர்

x

வீட்டில் அதிகாலையில் கேட்ட அலறல் சத்தம்.. சிறுமி மீது இடிந்து விழுந்த சுவர்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தொடர் மழையினால் வீடு இடிந்து விழுந்ததில் 11 வயது சிறுமி சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பொன்னமங்கலம் கிராமத்தில் பெய்த கனத்த மழையால் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

இதில், முத்துராமலிங்கம் குடும்பத்தினர் மூன்று பேர் அதிஷ்டவசமாக சிறு காயங்களுடன் தப்பினர். இதே போல், முத்துப்பாண்டி என்பவரது வீட்டில் பக்கவாட்டுச் சுவர் விழுந்ததில், அவரது மகள் பாண்டீஸ்வரி சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். காயம் அடைந்த சிறுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் இழப்பீடு குறித்து கணக்கெடுத்து வருகின்றனர். இடிந்து விழுந்த வீடுகளை தமிழக அரசு சீரமைத்து தர வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்