22 ஆண்டுகளாக பட்டாசு சத்தமே கேட்காத கிராமம்
22 ஆண்டுகளாக பட்டாசு சத்தமே கேட்காத கிராமம்
சூலூர் அருகே அரிய வகை வௌவால்களை பாதுகாப்பதற்காக, 22 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காமலேயே தீபாவளியை கொண்டாடி வரும் கிராம மக்கள், வௌவால்களுக்கு சரணாலயம் அமைக்கப்போவதாக கூறியுள்ளனர்.
கோவை மாவட்டம் கிட்டாம் பாளையம் கிராமத்தில், ஏராளமான அரிய வகை வெளவால் இனங்கள் இருந்து வருகின்றன. எனவே இந்த வெளவால் இனங்களை பாதுகாப்பதற்காக அக்கிராமத்தினர், 22 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காமலேயே தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில் தங்கள் கிராமத்திலுள்ள வெளவால் இனங்களை பாதுகாக்க, வெளவால்கள் சரணலாயம் அமைக்கப்போவதாக கூறியுள்ள அக்கிராம மக்கள், அதற்காக மரங்கள் வளர்க்கப்பட்டு, குளம் குட்டைகள் தூர்வாரப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
Next Story