அண்ணா பல்கலை.யில் நடந்த திடீர் ஆய்வு.. "10 நாட்களில் அறிக்கை..." | Anna University
தமிழக அரசால் உருவாக்கப்பட்ட சமூக நீதி கண்காணிப்பு குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் கருணாநிதி மற்றும் சுவாமிநாதன் தேவதாஸ் ஆகியோர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பல்கலைக்கழகத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட மாணவர் சேர்க்கை, பேராசிரியர்கள் நியமனம் ஆகியவற்றில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ரவிக்குமாரிடம் கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, சமூக நீதி கண்காணிப்பு குழு உறுப்பினர் சுவாமிநாதன் தேவதாஸ் அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொடர்பான அறிக்கை அடுத்த ஒரு வாரத்தில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றார்.
Next Story