அடக்கம் செய்த முதியவர் திடீரென உயிருடன் நடந்து வந்ததால் அதிர்ச்சி-பாட்டுபாடியபடி ஜாலியாக வந்த அதிசயம்
குன்னூரில் இறந்ததாக கூறி அடக்கம் செய்யப்பட்ட முதியவர் உயிரோடு வந்ததால் குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குன்னூர் பேருந்து நிலையம் பகுதியில் சுற்றி திரிந்த எம்ஜிஆர் என்ற ராஜேந்திரன் மாயமானார். கடந்த 2 மாதங்களுக்கு முன், இறந்துவிட்டதாக கூறி ஒரு உடலை முதியவரின் குடும்பத்தாரிடம் போலீசார் ஒப்படைத்தனர். குடும்ப வழக்கப்படி இறுதிசடங்கு செய்து உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், இறந்ததாக கூறப்பட்ட முதியவர் தற்போது உயிரோடு வந்திருப்பது குடும்பத்தினரை இன்ப அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. எம்ஜிஆர் பாடல்களை பாடியபடி முதியவர் நகர்வலம் வருவதை அப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.
Next Story