விபத்தில் பெற்றோரை இழந்த மாணவி... வீடு கட்ட ஆணை வழங்கி சொன்னதை செய்து காட்டிய கலெக்டர்

x

சேலம் அருகே விபத்தில் பெற்றோரை இழந்த மாணவிக்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு

கட்டி கொள்ள ஆணை வழங்கப்பட்டது. கல்பாரப்பட்டியை சேர்ந்த அமுதா என்ற மாணவியின் பெற்றோர் மற்றும் சகோதரி விபத்தில் உயிரிழந்தனர். இதனால் பாட்டி பராமரிப்பில் உள்ள அமுதாவுக்கு கல்வி உள்ளிட்ட அனைத்து உதவிகளும் அரசு சார்பில் அளிக்கப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். அதன்படி

பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணையை அமுதாவிடம் ஆட்சியர் கார்மேகம் வழங்கினார். இதற்காக மாணவி அமுதா அரசுக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்