யூடியூப்பில் யோகா கற்ற மாணவி.. சர்வதேச யோகா போட்டிக்கு தேர்வு.. உதவி கரம் நீட்டுமா அரசு?
சென்னை திருவொற்றியூரில் 500 யோகாசனங்களில் அசத்தும் கல்லூரி மாணவிக்கு அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவொற்றியூர், கார்கில் நகரைச் சேர்ந்த வெல்டிங் வேலை செய்யும் ரமேஷ் என்பவரது மகளான புனிதவள்ளி, கல்லுாரியில், பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். வெறும் யூட்யூபில் பார்த்து யோகா ஹாசனங்களை கற்றுக் கொண்ட கல்லூரி மாணவி, ஒருவர் தற்போது உத்திரபிரதேசத்தில் நடைபெறவுள்ள சர்வதேச யோகா போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார்.
முன்னதாக இவர் யோகாசனத்தில் கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் நடக்கவுள்ள சர்வதேச போட்டிக்கு செல்ல போதிய நிதி வசதி இல்லாததால் தவித்து வரும் புனிதவள்ளிக்கு அரசு உதவினால் அவர் யோகாவில் இன்னும் சாதிக்க கூடும் என்பதால் அரசு
உதவ முன்வர வேண்டும் என்றும் பலரும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.