ஐரோப்பியாவில் செல்போன்,டேப்லெட்கள் அனைத்திற்கும் ஒரே சார்ஜர்
செல்போன் போன்ற அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் ஒரே சார்ஜர் பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கும் சட்டம், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த புதிய சட்டத்திற்கு ஆதரவாக 602 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் பதிவானதாக கூறப்பட்டுள்ளது. 8 உறுப்பினர்கள் புறக்கணிப்பு செய்ததாக ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் படி, ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் உட்பட பல்வேறு மின்னணு சாதனங்களுக்கு பொதுவான சார்ஜர் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்குள் மொபைல் போன்கள், டேப்லெட்டுகளுக்கான பொதுவான சார்ஜர் பயன்படுத்த வேண்டும் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 2024 முதல், யுஎஸ்பி டைப்-சி வகை சார்ஜர் அனைத்து மொபைல் போன்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கும் ஒரே சார்ஜராக இருக்கும்.