கணவனின் இறுதிச் சடங்கை முடித்து விட்டு வீட்டிற்க்கு திரும்பி வந்த மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

ராணிப்பேட்டையில், கணவரின் இறுதிச் சடங்கிற்காக சொந்த ஊர் சென்றிருந்தபோது, வீட்டின் கதவை உடைத்து, 10 சவரன் நகை, மூன்றரை லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதால், அதிர்ச்சி அடைந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வாலாஜாபேட்டை பகுதியை சேர்ந்த பழனி என்பவர், திடீரென உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரான வேலூருக்கு கொண்டு செல்லப்பட்டது. கணவனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சென்றபோது, கொள்ளையர்கள் வீடு புகுந்து கைவரிசை காட்டியுள்ளனர். மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்