இறந்தும் பல உயிர்களில் வாழப்போகும் பள்ளி மாணவன் - மகனுக்காக பெற்றோரின் பாச முடிவு | Salem | Student
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, சாலை விபத்தில் படுகாயமடைந்த 9ம் வகுப்பு மாணவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நரசிங்கபுரம் ஜெஜெ நகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் - சித்ரா தம்பதியரின் மகன் சம்ரீஷ். தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வந்த நிலையில், தனது தந்தையின் இருசக்கர வாகனத்தில் சென்றபோது வாழப்பாடி நோக்கி சென்ற பிக்கப் சரக்கு வாகனம் மோதியது. இதில் சம்ரீஷ் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.
Next Story