அதிரடியாக களத்தில் இறங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ், எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்

x

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளை ஆய்வு செய்யும் புதிய திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் தொடங்கி வைத்தார்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் உள்ள லேடி வில்லிங்டன் மேல்நிலைப் பள்ளியில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ஒவ்வொரு தொகுதியிலும் ஏதாவது ஒரு அரசு பள்ளி அல்லது அரசு நிதி உதவி பெறும் பள்ளியை திடீரென ஆய்வு மேற்கொள்வோம் என்றும், அந்த பள்ளிக்கான தேவையைக் கேட்டறிந்து, அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பிப்போம் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆய்வு செய்வதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்