வயது முதிர்வால் இறந்த தாய்...துக்கம் தாங்காமல் அம்மாவின் மார்பில் உயிரை விட்ட பாசக்கார மகள்

x

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே காத்தாடிமுக்கு பகுதியை சேர்ந்தவர் வேலம்மாள். ஆசிரியை-யாக பணியாற்றிய இவர், ஓய்வுக்கு பிறகு மகள் பகவதி அம்மாள் வீட்டில் வசித்து வந்தார். வயது முதிர்வால் உடல்நிலை பாதிக்கப்பட்டு வேலம்மாள் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், வீட்டில் திடீரென மயங்கி விழுந்து வேலம்மாள் உயிரிழந்தார். இதையடுத்து உறவினர்களுக்கு தெரியப்படுத்தி, வேலம்மாள் உடலை அடக்கம் செய்வதற்கான இறுதி சடங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. வேலம்மாள் உடல் அருகே தேம்பி தேம்பி அழுதுக் கொண்டிருந்த மகள் பகவதி அம்மாள், திடீரென தாயாரின் மார்பின் மேல் மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தபோது, ஏற்கனவே பகவதி அம்மாள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தாயின் இறப்பை தாங்கி கொள்ள முடியாமல், அவரின் மார்பின் மேல் சாய்ந்து மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்