செல்பி எடுத்து கொண்டிருந்தபோதே நேர்ந்த விபரீதம் - நீரில் அடித்து செல்லப்பட்டதை கண்டு கதறிய நண்பர்
திண்டுக்கல் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்ற போது கால் தவறி கிழே விழுந்த நபரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை புல்லா வெளி நீர்விழ்ச்சிக்கு அஜய் பாண்டியன் என்பவர் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார்.
செல்பி எடுக்க முயன்றபோது ஆழமான பள்ளத்தாக்கிற்குள் வழுக்கி விழுந்துள்ளார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூர் தீயணைப்பு துறையினர், அஜய் பாண்டியனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story