ஊரை விட்டு எஸ்கேப்பாக ரெடியான தம்பதி.. கையும் களமாக பிடித்த மக்கள் - சென்னையில் பரபரப்பு சம்பவம்

x

சென்னையில் சிறுதொழில் செய்ய வாய்ப்பு அளிப்பதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர்களை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த மகாதேவ பிரசாத்- ஜெயஸ்ரீ தம்பதியினர், சிறு தொழில் செய்ய வாய்ப்பளிப்பதாக கூறி 500-க்கும் அதிகமான பெண்களிடம் தலா 25 ஆயிரம் ரூபாய் முன்பணமாக பெற்றுள்ளனர். அவர்களிடம் சிறுதானியங்களை கொடுத்து பாக்கெட் செய்து தரும்படி கூறிய அந்த தம்பதி, மாத ஊதியமாக 5 ஆயிரம் வரை ரூபாய் வரை தருவதாக கூறியுள்ளனர். இரண்டு மாதங்களாக வேலை செய்தவர்களுக்கு சம்பளம் கொடுக்காமல், வசூலான முன்பணத்துடன் மகாதேவ பிரசாத்தும், அவரது மனைவியும் தலைமறைவாகி விட்டனர். வெள்ளிக்கிழமை இரவு, மகாதேவ பிரசாத் வீட்டை காலி செய்யும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்ததைக் கண்ட பாதிக்கப்பட்ட பெண்கள், அவர்களை பிடித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த நூற்றுக்கணக்கானோர், தர்ணா போராட்டத்திலும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், வழக்கை பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவிற்கு மாற்றி உள்ளதாகவும், மோசடி நபர்கள் வெளியூருக்கு தப்பி செல்லாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்