கைஎலும்பு முறிந்த சிசு - தாயும், சேயையும் திடீரென வெளியேற்றிய அரசு மருத்துவமனை

x

கையில் எலும்பு முறிவுடன் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பச்சிளம் குழந்தை குணமாகாத நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஓசூர் அருகே கொத்தூர் கிராமத்தை சேர்ந்த வசந்தா, பிரசவ சிகிச்சைக்காக உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பிறந்த குழந்தையின் கையின் 3 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதை அடுத்து, தாயும், குழந்தையும் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். சிகிச்சை அளித்து வந்த நிலையில், திடீரென தாயும், குழந்தையும் டிஸ்சார்ஜ் செய்து வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், அரூர் முன்னாள் எம்எல்ஏ டெல்லிபாபு ஆகியோர் மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு குழந்தை மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்