விசாரணைக்கு சென்றவருக்கு சரமாரி அடி - தூத்துக்குடியில் பயங்கரம்

x

தூத்துக்குடி மாவட்டத்தில், காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்றவரை தாக்கிய புகாரில், உதவி காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

தூத்துக்குடி மாவட்டம் எம்.சண்முகபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதனுக்கும், சூரங்குடியைச் சேர்ந்த அழகு முருகேசனுக்கும் இடையே நிலப்பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சூரங்குடி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழகு முருகேசன், அவரது சகோதரர் ராஜகனி ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது, காவல் உதவி ஆய்வாளர் சுந்தரம், ராஜகனியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்திய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், உதவி ஆய்வாளர் சுந்தரத்தை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்....


Next Story

மேலும் செய்திகள்