கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணிகள்- கிடைத்த அரிய பழங்கால பொருட்கள்

x

சிவகங்கை மாவட்டம் கீழடி சுற்றுவட்டார பகுதிகளில், தற்போது எட்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அகழாய்வுப் பணிகளில் இதுவரை ஏராளமான அரிய பொருட்களின் தொகுப்புக்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. காதில் அணியும் வளையம், தங்க தொங்கட்டான், பாசிமாலை, செம்பு மற்றும் வெள்ளி நாணயங்கள் போன்றவை கண்டறியப்பட்டுள்ளன. இதுதவிர தந்தத்தால் ஆன அணிகலன்கள், விளையாட்டு பொருட்கள், சுடுமண் பொம்மைகள், தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் உள்ளிட்டவையும் கிடைத்துள்ளன. இதைத் தொடர்ந்து கீழடி, அகரம், கொந்தகை ஆகிய இடங்களில் தீவிரமாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்