87,000 ஹெக்டேர் பயிர்கள் பாதிப்பு..உரிய இழப்பீடு வழங்கப்படுமென அமைச்சர் வாக்குறுதி

x

டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு, உரிய இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி உறுதியளித்து உள்ளார். தஞ்சை மாவட்டம் புத்தூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களை, அமைச்சர் சக்கரபாணி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது, பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் அமைச்சர் சக்கரபாணி கேட்டறிந்தார். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், 87 ஆயிரம் ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்