"ஹே தள்ளு, தள்ளு, தள்ளு"... 82 டன் விமானத்தில் கயிற்றை கட்டி இழுக்கும் போட்டி...
அமெரிக்காவில் விமானத்தைக் கயிறு கட்டி இழுக்கும் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
வீக்கெண்டில் என்ன செய்யலாம் என்று யோசித்து யோசித்தே சனி, ஞாயிறு விடுமுறைகள் கழிந்து விடும்...
ஆனால், விர்ஜினியா மக்கள் போர் அடித்தால் என்ன செய்வார்கள் தெரியுமா?... நேரே விமான நிலையம் சென்று விமானத்தைக் கயிறு கட்டி இழுக்க ஆரம்பித்து விடுவார்கள்...
சுமார் 82 ஆயிரம் கிலோ எடையுள்ள விமானத்தில் கயிற்றைக் கட்டி தர தரவென்று இழுப்பது தான் போட்டி...
மக்களும் மாங்கு மாங்கென்று விமானத்தை பலம் கொண்ட மட்டும் முழு மூச்சாக பிடித்து இழுப்பார்கள்...
ஆனால், இந்தப் போட்டி ஒரு நல்ல காரியத்திற்காக நிதி திரட்ட நடத்தப்படுகிறது...
இதில் மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்பது கூடுதல் சிறப்பு...
மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டிக்காக இந்த நிதி பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது...