ட்விட்டரிலிருந்து விலகிய 8 லட்சம் பயனாளர்கள்...ஆட்டம் கண்ட ட்விட்டர் நிறுவனம்
கடந்த வாரம் எலான் மஸ்க் ட்விட்டரைக் கைப்பற்றியது முதலே, அங்கு வரிசையாக பல சிக்கல்கள்... நிர்வாகிகள் மூவரின் நீக்கத்தை அடுத்து, 50 சதவீதம் பேர் வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள் என கம்பெனியின் உள்ளக ஆவணம் ஒன்றின் மூலம் தெரியவந்தது.
அமெரிக்க நேரப்படி வெள்ளிக்கிழமை காலை முதல் வேலைநீக்கம் பற்றிய அறிவிப்புகள், அந்தந்த ஊழியருக்கு தனித்தனியாக அனுப்பப்பட்டு வருகின்றன. முக்கிய அதிகாரிகள் முதல் இளநிலைப் பணியாளர்வரை நீக்கம் பற்றி ட்வீட்டுகளைப் பதிந்து வருகிறார்கள்.
அமெரிக்கா, கனடா கொள்கைவகுப்பு இயக்குநர் மிச்செல் ஆஸ்டின் நீக்கம் குறித்து அவரே தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அக்டோபர் 27 முதல் நவம்பர் 1வரை 8.75 லட்சம் பேர் ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக நீக்கியுள்ளனர். ஏற்கெனவே 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் கணக்குகள் முடக்கிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.