"திருப்பதியில் மட்டும் 7 ஆயிரம் போலி வாக்காளர்கள்"... ஆதாரங்களை வெளியிட்ட எதிர்க்கட்சிகள்

x

ஆந்திராவில் வரும் 13 ஆம் தேதி சட்டமன்ற மேலவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் திருப்பதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும், 7 ஆயிரம் போலி பட்டதாரிகள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், போலியானவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் போலீசாரிடம் புகாரளித்துள்ளன. இதனிடையே திருப்பதி மலையில், 5 முதல் 10 வகுப்பு வரை மட்டுமே படித்தவர்கள் கூட பட்டதாரிகள் என குறிப்பிடப்பட்டு, வாக்காளர் பட்டியல் சேர்க்கப்பட்டு இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், அதுதொடர்பான ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர். ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளதாகவும், ஆனால் அதிகாரிகளிடமிருந்து சரியான பதில் இதுவரை கிடைக்கவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்