Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19-01-2023) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19-01-2023) | Morning Headlines | Thanthi TV
x

சட்டம்- ஒழுங்கு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை...உள்துறை செயலாளர், டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் பங்கேற்பு...

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல்....வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ம் தேதி தொடங்கும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு...

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்...அரசியல் சார்ந்த விளம்பரங்களை மறைக்கும் பணி தீவிரம்...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து அதிமுக தலைமை முடிவு செய்யும் என அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தகவல்...அதிமுக தலைமையை சசிகலா சந்திப்பதற்கு வாய்ப்பு இல்லை எனவும் திட்டவட்டம்...

முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். தரப்பு மாவட்ட செயலாளர்கள் வரும் 23ம் தேதி சென்னையில் நடக்கிறது...ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் ஆலோசனை...

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பாக த.மா.கா. போட்டியிடுமா...? கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும் என ஜி.கே.வாசன் அறிவிப்பு..

தேர்தல் பணிகளை கவனித்து, ஒருங்கிணைக்க பாஜக சார்பாக மாநில குழு...பாஜக எம்எல்ஏ சரஸ்வதி உட்பட 14 பேரை நியமித்தார், கட்சியின் தலைவர் அண்ணாமலை...

திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு...மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது...3 மாநிலங்களில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ஆம் தேதி எண்ணப்படுகின்றன...

காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமைப்பதில் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் தீவிரம்...தெலுங்கானாவில் நடைபெற்ற பிரமாண்ட கூட்டத்தில் கேரளா, டெல்லி, பஞ்சாப் முதல்வர்கள் மற்றும் உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் பங்கேற்றனர்...

இடதுசாரிகளுக்குள் ஒற்றுமை மிக முக்கியம் என சே குவாராவின் மகள் அலெய்டா அறிவுரை...இன்றைய சூழலில் கியூபாவுக்கு பெரிய ஆதரவு தேவைப்படுவதாகவும், சென்னையில் பேட்டி...

காசி மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையே உள்ள தொடர்பை குறிக்கவே தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக ஆளுநர் ரவி விளக்கம்....தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கு பரிந்துரைத்தது போல அனுமானம் செய்வது தவறானது எனவும் அறிக்கை...

கிணத்தை காணோம் என்பது போல, சொல்ல வேண்டிய நிலைமை ஆளுநருக்கு ஏற்பட்டு விட்டது...திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கிண்டல்...

தனது பிழையை உணர்ந்து வருந்தி ஆளுநர் ரவி அறிக்கை வெளியிட்டிருப்பதாக வி.சி.க தலைவர் திருமாவளவன் டுவிட்டர் பதிவு...தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டால் சரி எனவும் கருத்து...

டி.வி. நிகழ்ச்சியில் தனது கட்சி நிர்வாகி வெற்றி பெறுவதற்காக வாக்களிக்குமாறு கூறுவதுதான் ஒரு எம்.பி.யின் வேலையா...?விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு நடிகை வனிதா விஜயகுமார் கேள்வி...

என்எல்சி நில எடுப்பு விவகாரம் தொடர்பாக அமைச்சர் முன்னிலையில் பேச்சுவார்த்தை...உடன்பாடு ஏற்படாத நிலையில், வெளியேறிய விவசாயிகள்...

உக்ரைனின் ப்ரோவரி நகரில் மழலையர் பள்ளியில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து...உக்ரைன் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் பலி... 22 பேர் படுகாயம்...

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி...12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது....

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 208 ரன்களை குவித்தார் இளம் வீரர் சுப்மன் கில்...149 பந்துகளை சந்தித்து 19 பவுண்டரி, 9 சிக்ஸர்களை விளாசி சாதனை...


Next Story

மேலும் செய்திகள்