Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29-11-2022) | Morning Headlines | Thanthi TV
குஜராத்தில், இன்று மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பிரசாரம்.....இறுதிகட்ட வாக்குசேகரிப்பில், தலைவர்கள் தீவிரம்.....
குஜராத்தில் ஆம்ஆத்மி ஆட்சிக்கு வந்தால், ஊழல் செய்த அமைச்சர்களை சிறைக்கு அனுப்புவோம்....சூரத் பிரசார கூட்டத்தில், அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்.....
கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் மாளிகை இருந்த மாளிகைமேட்டில் அகழ்வாராய்ச்சி பணி...முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு...
இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர்களால் வைக்கப்பட்டது.....பாரதம் என்பது 2,500 ஆண்டுகளுக்கு முன்பே உள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு....
ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காதது, ஆளுநரின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது......தந்திடிவிக்கு அளித்த பேட்டியில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு....
ஆளுநர்களுக்கு மசோதாக்களை தாமதப்படுத்தும் எண்ணம் இல்லை என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்...காலதாமதம் எனக் கருதாமல், கால அவகாசம் எடுத்துக்கொண்டதாகவே கருத வேண்டும் என கருத்து....
ஆளுநர் பதவி என்பதே காலாவதியான ஒன்றுதான், அது இல்லை என்றாலே ஆன்லைன் ரம்மியை ஒழித்திருக்க முடியும்...திமுக எம்.பி கனிமொழி ஆதங்கம்....
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு.....125வது நாளாக கடும் குளிரிலும் பொதுமக்கள் போராட்டம்.....