29 நிமிடத்தில் 63 செய்திகள்.. காலை தந்தி செய்திகள்

x

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை 50 ரூபாயாக குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாக தக்காளி 100 ரூபாய் வரை விற்பனையான நிலையில், வரத்து அதிகரிப்பின் காரணமாக விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சில்லறை விற்பனையில் தக்காளி கிலோ 60 முதல் 65 ரூபாய் வரை விற்கப்படுகிறது. நேற்று வரை 350 முதல் 400 டன் தக்காளி வந்த நிலையில் இன்று கோயம்பேடு சந்தைக்கு 700 டன் தக்காளி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி.க்கள் வாரத்தில் ஒரு நாள் பொதுமக்களை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, வாரத்தில் புதன்கிழமை பொதுமக்களை சந்திக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், பொதுமக்கள் எளிதாக காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து புகார் அளிக்கவும் வழக்கின் விவரங்களை கூறவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஈத் பண்டிகை அன்பையும், தியாகத்தையும் விளக்கும் புனித பண்டிகை என குறிப்பிட்டுள்ளார். தியாகம் மற்றும் மனித குலத்துக்கு தன்னலமற்ற சேவையை வழங்கும் பாதையை பின்பற்ற இந்த பண்டிகை நம்மை ஊக்குவிக்கிறது என்றும், இந்நாளி​ல் சமுதாயத்தில் பரஸ்பர சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை பரப்ப நாம் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்வோம்." என்றும் திரௌபதி முர்மு கூறியுள்ளார்.

சமத்துவம், சகோதரத்துவத்தின்படி நபிகள் வழி நடக்கும் இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஏழை, எளியோரின் பசி தீர்த்துக் கொண்டாடும் தியாகத்தின் திருநாள் இது எனவும் கூறியுள்ளார்.

பக்ரீத் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, தனியார் பேருந்துகளின் கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பக்ரீத் பண்டிகை விடுமுறையோடு சேர்த்து வார விடுமுறையும் இருப்பதால், அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னையில் இருந்து 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனிடையே, தனியார் பேருந்துகளில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல வழக்கமாக 600 ரூபாய் முதல் வசூலிக்கப்படும் நிலையில், தற்போது ஆரம்ப கட்டணமே ஆயிரத்து 300 ரூபாய் என இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்