வந்த 3வது நாளில்லையே நீதிபதி வீட்டில் நர்ஸ் செய்த காரியம்..கள்ளக்காதலனுடன் சிக்கிய கேடி லேடி...
சென்னையில் நீதிபதியின் வீட்டிலிருந்து 207 சவரன் நகைகளை கொள்ளையடித்து கள்ளக்காதலனுடன் தப்பியோடிய செவிலியரை போலீசார் கைது செய்தனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் போக்சோ நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருபவர் தமிழ்ச்செல்வி. இவர் தன்னுடைய மாமானார் மற்றும் மாமியாருடன் சென்னை, அசோக்நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில், நீதிபதியின் மாமியரான சுந்தரவள்ளியை கவனித்து கொள்வதற்காக செவிலியர் தேவி என்பவரை பணியில் அமர்த்தியுள்ளனர். இதில், பணிக்கு சேர்ந்த மூன்றாவது நாளிலே, வீட்டிலிருந்த 207 சவரன் நகைகளுடன் தேவி தப்பியோடியதாக நீதிபதியின் மாமனார் போலீசில் புகாரளித்தார். விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், எல்ராம் பட்டு பகுதியை சேர்ந்த தேவி, தனது கள்ளக்காதலன் ஜெகநாதனுடன் சேர்ந்து 207 சவரன் நகைகளை திருடியது தெரியவந்தது. இருவரையும் தனிப்படை அமைத்து தேடி வந்த போலீசார், விழுப்புரம் அருகே பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்தனர். இருவரிடம் இருந்தும் 207 சவரன் நகைகள் மற்றும் 34 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் சிறையில் அடைத்தனர்.