ATM-ல் ரூ.1,000-க்கு பதில் ரூ.3,000 வந்ததால் பரபரப்பு
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், 4 முனை கூட்ரோடு பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில், ஆயிரம் ரூபாய் எடுக்க முயன்றால், ஆறு 500 ரூபாய் நோட்டுகளுடன் மூவாயிரம் ரூபாய் வருவதாக தகவல் பரவியது. இதையறிந்த பலர் அந்த ஏடிஎம் மையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகள், அந்த ஏடிஎம் மையத்தை தற்காலிகமாக மூடினர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதிக ரூபாய் நோட்டுக்கள் வந்திருக்கலாம் என்றும், இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story