கடனை திருப்பி செலுத்த முடியாததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

x

கடனை திருப்பி செலுத்த முடியாததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே, வறுமையின் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகன் என 3 பேர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியு

திருச்செங்கோடு தாலுக்கா நடுப்பாளையம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி நந்தகுமார் என்பவர், திருமணமாகாத நிலையில், தந்தை நடேசன், தாய் சிந்தாமணி ஆகியோருடன் வசித்து வந்தார். நந்தகுமார் வேலைக்கு சென்று, பெற்றோரின் மருத்துவ செலவு மற்றும் உணவு தேவைகளை கவனித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, நந்தகுமாருக்கு கையில் காயம் ஏற்பட்டதை அடுத்து, வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, வறுமையின் காரணமாக குடும்ப செலவிற்காக அக்கம் பக்கத்தினரிடம் கடன் பெற்றுள்ளனர். கடனை திருப்பிச் செலுத்த முடியாததால், தந்தை, தாய், மகன் 3 பேரும் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர். தகவலின் பேரில் வந்த போலீசார், 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்