2019-ல் நடந்த பெங்களூரு கொள்ளை சம்பவம் - சென்னையை சேர்ந்தவர் கைது - கர்நாடக போலீஸுடன் வழக்கறிஞர்கள் தள்ளு முள்ளு
சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு வந்த கர்நாடக போலீசாரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களால் பரபரப்பு ஏற்படடது.
2019-ல் பெங்களூருவில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக சென்னையை சேர்ந்த ராஜேஷ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில், ராஜேஷ் திருடிய நகைகளை அவரின் நண்பரிடம் கொடுத்து, திருவொற்றியூர் பகுதியில் உள்ள 2 நகைக்கடைகளில் அடகு வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் கர்நாடக போலீசார் திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்துள்ளனர். அப்போது, கர்நாடக போலீசார் 80 சவரனில் 60 சவரன் வழங்குமாறு டீல் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு வந்த நகை கடை உரிமையாளர்களின் வழக்கறிஞர்கள், ஆதாரங்கள் ஏதேனும் இருக்கிறதா என கூறி கர்நாடக போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story