2 வருடம்.. 2 குழந்தைகள்.. பிறந்த உடன் கொன்று பிரிட்ஜில் வைத்த அரக்க தாய் - டம்மி பொய்யை கேட்டு ஏமாந்த கணவன்.. காட்டிக்கொடுத்த அரசு

x

தென்கொரியாவில், பெற்ற தாயே, 2 பச்சிளங்குழந்தைகளின் கழுத்தை நெறித்துக் கொன்று, உடல்களை ப்ரீசரில் அடைத்து வைத்த கொடூர சம்பவத்தை விளக்குகிறது இந்த தொகுப்பு...

இப்படி ஒரு அரக்க குணம் கொண்ட சம்பவம், அரிதிலும் அரிதுதான் என சொல்ல வேண்டும்...

மருத்துவமனை தகவலின் அடிப்படையில், பிறந்த குழந்தைகளின் கணக்கெடுப்பை அந்நாட்டு அரசு அதிகாரிகள் மேற்கொண்டபோது, இந்த அரக்க குணம் கொண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

அதன்படி, சம்பந்தப்பட்ட வீட்டில் அதிகாரிகள் கணக்கெடுப்பு மேற்கொண்டபோது, 5 குழந்தைகளுக்கு தாயான அந்தப் பெண், 3 குழந்தைகளின் பெயர்களை மட்டும் கூறிய நிலையில், மீதி 2 குழந்தைகள் குறித்து முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகம் எழவே, தகவலின் பேரில் வந்த போலீசார், பெண்ணிடம் விசாரித்தபோது, அவர் அளித்த வாக்குமூலம் போலீசாரையே அதிர்ச்சி அடைய வைத்தது.

தென்கொரியாவைச் சேர்ந்த பெண்ணுக்கு ஏற்கனவே, 8, 10 மற்றும் 12 வயதில் 3 பிள்ளைகள் உள்ளன.

கடந்த 2018ம் ஆண்டு 4வதாக ஒரு குழந்தை பிறந்துள்ளது. பிறந்த ஒரே நாளில், அந்த பச்சிளங்குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொன்றதுடன், உடலை வீட்டில் இருந்த ப்ரிட்ஜின் ப்ரீசரில் ஆண்டுக் கணக்கில் அடைத்து வைத்திருந்தது போலீசாரை அதிர வைத்தது.

அதேபோல், கடந்த 2019ம் ஆண்டு 5வதாக பிறந்த குழந்தையையும், அதே பாணியில் தாய் கொலை செய்து ப்ரீசரில் வைத்துள்ளார்.

பொருளாதார பிரச்சினை காரணமாக, தனது 2 குழந்தைகளையும் கொன்றதாக அந்தப் பெண் வாக்குமூலம் அளித்த நிலையில், இதுகுறித்து பெண்ணின் கணவரிடம் கேட்டபோது, கொலை செய்யப்பட்ட அந்த குழந்தைகளையும் கருவில் இருக்கும்போதே கலைத்ததாக மனைவி கூறியதாக கூறினார்.

அதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்​ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.​

பச்சிளங்குழந்தைகளை கொன்று மனதை ரணமாக்கிய தாயின் இந்த கொடூர கொலை சம்பவம், தென்கொரியா மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்