கட்டிட சென்டரிங்கை பிரிக்க இறங்கிய...2 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி மரணம்
பேரணாம்பட்டு பகுதியில், புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில், தரைக்கு அடியில், குடிநீர் தொட்டி கட்டப்பட்டு வருகிறது.
இதற்காக அமைக்கப்பட்ட சென்டரிங்கை பிரிப்பதற்காக, 3 தொழிலாளர்கள் குடிநீர் தொட்டியில் இறங்கியுள்ளனர்.
அப்போது, மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூவரும் மயங்கி விழுந்தனர்.
சக தொழிலாளர்கள் அவர்களை மீட்டு, பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி, வெங்கடேசன், முருகன் ஆகியோர் உயிரிழந்தனர்.
மற்றொருவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story