தெரியாத எண்ணிலிருந்து 2 மிஸ்டு கால் - ஒரே சொடக்கில் ரூ.50 லட்சம் அபேஸ்

x

டெல்லியில் தெரியாத எண்ணிலிருந்து வந்த அழைப்பை ஏற்ற தொழிலதிபர் கணக்கிலிருந்து 50 லட்சம் ரூபாயை சைபர் கும்பல் கொள்ளையடித்துள்ளது.டெல்லியில் பாதுகாப்பு சேவை நிறுவன அதிகாரிக்கு இரவு 8 மணியளவில் 2 அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்துள்ளது. அவர் அழைப்பை எடுத்து பேச முயற்சித்த போது, எதிர் தரப்பில் இருந்து எந்த பதிலும் வராததால் கட் செய்துள்ளார். பின்னர் அவருடைய செல்போனில் மெசேஜ் பகுதியை சோதித்தபோது, அவருடைய கணக்கிலிருந்து 50 லட்சம் ரூபாய் பிற கணக்குகளுக்கு மாற்றப்பட்டதை கண்டு அதிர்ந்துள்ளார். அவர் கொடுத்த புகாரில் டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர். சிம் ஸ்வாப்பிங் டெக்னாலஜியில் பாதிக்கப்பட்டவரின் செல்போனை கட்டுக்குள் கொண்டுவந்து சைபர் கொள்ளை கும்பல் கைவரிசையை காட்டியுள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்