பிறந்து 2 நாட்கள் ஆன குழந்தை மர்மமான முறையில் உயிரிழப்பு..உருக்குலைந்த பெற்றோர்கள் மருத்துவமனையை முற்றுகை ராணிப்பேட்டையில் அதீத பரபரப்பு

x

ராணிப்பேட்டை மாவட்டம் சுமைதாங்கி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ராஜ்குமார் - சந்திரிகா என்ற தம்பதிக்கு கடந்த 28ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், குழந்தை பிறந்து 2 நாட்களே ஆன நிலையில், மருத்துவமனை வளாகத்தில் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த குழந்தையின் உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பானது. தொடர்ந்து போலீசாரின் சமாதான பேச்சுவார்த்தைக்கு பின் அவர்கள், கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்