100க்கு 138 மார்க்; வாங்கியும் ஃபெயில் - கிறுகிறுக்க வைத்த மாணவியின் +2 முடிவு... கடைசியில் தெரியவந்த உண்மை

x

மதுரையில், மாணவியின் மதிப்பெண் பட்டியலில் தமிழில் 100க்கு 138 மதிப்பெண் வந்த விவகாரத்தில், குழப்பத்திற்கான காரணம் தெரியவந்துள்ளது.

மதுரை சூரக்குளத்தை சேர்ந்த ஆரத்தி, தனியார் மூலம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத அனுமதி பெற்று தேர்வு எழுதியிருந்தார். தமிழில் 100க்கு 138 மதிப்பெண்கள் வந்ததால் அதிர்ச்சியடைந்த ஆரத்தி, அதுதொடர்பாக திருப்பரங்குன்றத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியை அணுகியும் உரிய விளக்கம் கிடைக்காததால் குழப்பத்தில் உள்ளார். 600 மதிப்பெண்ணுக்கு தேர்வு முடிவுகள் வரும் என எதிர்பார்த்த நிலையில், 1200க்கு மதிப்பெண் வந்ததே இந்த குழப்பத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு புதிய பாடத்திட்டத்தில் 600 மதிப்பெண்ணுக்கு பதிவு செய்வதற்கு பதிலாக, 1200 மதிப்பெண்ணுக்கு பதிந்தது மாணவியா? அல்லது திருப்பரங்குன்றம் பள்ளியா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கார்த்திகா, முறையாக விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளார். இயற்பியல், வேதியல், உயிரியல் என மூன்று பாடங்களில் தேர்ச்சி பெற்றாலும், கணிதத்தில் 56 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறாததால், மறுதேர்வு எழுத வேண்டிய கட்டாயம் உள்ளதாகவே தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்