கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பு செயற்பாட்டாளர்கள் 127 பேர் கைது
கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பு நடத்திய முழு அடைப்பு போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு தராததால் பல இடங்களில் வன்முறை நிகழ்ந்தது.
என்ஐஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திறக்கப்பட்ட கடைகளை மூட வேண்டும் என அந்த இயக்கத்தினர் பல இடங்களில் தகராறில் ஈடுபட்டனர்.
மேலும், இயக்கப்பட்ட பேருந்துகளின் மீது கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கல்வீச்சில், பல தனியார் மற்றும் அரசு பேருந்துகள் சேதமடைந்தன. 70 அரசு பேருந்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
இதன் மூலம அரசு போக்குவரத்து கழகத்திற்கு சுமார் 30 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொது சொத்துகள் சேதமடைந்துள்ளது.
ஆம்புலன்ஸை மறித்தும், கடைகளை அடைத்தும், வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 127 பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
229 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மலப்புரம், கருவரகுண்டு, மாஞ்சேரி, கோட்டக்கல், திரூர், தனூர், பெரிந்தல்மன்னா ஆகிய பகுதிகளில் இருந்து பாப்புலர் ஃப்ரண்ட் தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.