பாரில் பயங்கர துப்பாக்கிசூடு.. ரத்த வெள்ளத்தில் துடி துடித்த 12 உயிர்கள்.. வன்முறை மாநிலமாக மாறி வரும் குவானாஜுவாடோ

x

பாரில் பயங்கர துப்பாக்கிசூடு.. ரத்த வெள்ளத்தில் துடி துடித்த 12 உயிர்கள்.. வன்முறை மாநிலமாக மாறி வரும் குவானாஜுவாடோ

மெக்சிகோ மதுபான விடுதியில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய மெக்சிகோ நகரமான இரபுவாடோவில் உள்ள மதுபான விடுதிக்குள் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர்கள் திடீரென்று சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில், 6 பெண்கள் உட்பட 12 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்து பரிதாபமாக பலியாகினர். குவானாஜுவாடோ மாநிலத்தில் ஒரே மாதத்திற்குள் நடந்த 2வது மிகப்பெரிய துப்பாக்கிச்சூடு சம்பவம் இதுவாகும். இந்த வன்முறையில் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பியோடிய குற்றவாளிகளை காவல் துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். உலகின் தலைசிறந்த கார் உற்பத்தி நிறுவனங்கள் அதிகம் இருக்கும் குவானாஜுவாடோ, சமீப ஆண்டுகளாக போதைப் பொருள் கும்பல்களுக்கு இடையே நடக்கும் வன்முறைகளால் மிகப்பெரிய அழிவுகளை சந்தித்து வருகின்றது. கடந்த செப்டம்பர் மாதம் 21ம் தேதி இதே போல் குவானாஜுவாடோ மாநிலத்தில் இரபுவாடோ நகருக்கு 96 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டரிமொரொ நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்