இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (30-01-2023)

x

மத்திய அரசு தடை செய்த பிபிசி யின் ஆவணப்படம் தொடர்பாக பட்ஜெட் கூட்டத் தொடரில் பிரதமர் பதிலளிக்க வேண்டும்...அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக கோரிக்கை...

"பிபிசி ஆவணப்படத்திற்கு எதிரான மனுக்கள்... உச்ச நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயல்..."மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜுஜு விமர்சனம்...

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் பாரத் ஜோடோ நிறைவு விழா...பனிப்பொழிவை பொருட்படுத்தாமல் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பேச்சு...

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து...சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில்

அதிமுக மக்களவை தலைவர் ரவீந்திரநாத்... மாநிலங்களவை தலைவர் தம்பிதுரை...நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சகம் அங்கீகாரம்...

எங்களுக்கான தேர்தல் 2024- மக்களவை தேர்தல் தான்...பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திட்டவட்டம்...

அதிமுக பொதுச்செயலாளர் பதவி நீக்க விவகாரம் குறித்து, உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு...தனது கருத்தையும் கேட்க வேண்டும் என மனுவில் கோரிக்கை..

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தன்னை அங்கீகரிக்க, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி இடையீட்டு மனுவை தாக்கல் செய்ய ஈபிஎஸ்-க்கு உச்சநீதிமன்றம் அனுமதி....3 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு ஓபிஎஸ், தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு...

சில விஷமிகளால் வீடியோ திரித்து எடிட் செய்யப்பட்டுள்ளதாக, அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு...சோதனைக் கூடத்திற்கு அனுப்பி சோதிக்கலாம் என, பாஜக தலைவர் அண்ணாமலை சவால்...

மகன் மறைந்தபிறகு கனத்த இதயத்தோடுதான் களத்தில் நிற்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்...ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என முதல்வர் ஸ்டாலின் பேச்சு...

அரசின் உரை முழுமையாக அவைக்குறிப்பில் இடம்பெற வேண்டும் என்பது தான் தீர்மானம்...ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்றது மக்களாட்சி மாண்பை காக்கும் மரபு எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்...


Next Story

மேலும் செய்திகள்