இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21-04-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines

x

காங்கிரசால் ஒருபோதும் வலிமையான இந்தியாவை உருவாக்க முடியாது... ராஜஸ்தான் மாநிலம் ஜலோரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில்பிரதமர் மோடி பேச்சு...

உலகின் சக்திவாய்ந்த தலைவராக பிரதமர் மோடி இருந்தால், ஏன் வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கவில்லை, பணவீக்கத்தை கட்டுப்படுத்தவில்லை...காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி...

அசாம் மாநிலம் சில்கார் பகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ...திரளான தொண்டர்கள் பங்கேற்பு...

இந்தியா கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்...மத்திய பிரதேச மாநிலம் சத்னாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேச்சு...

இன்சுலின் ஊசி செலுத்த மறுத்து அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல பாஜக அரசு விரும்புகிறது...ராஞ்சி இந்தியா கூட்டணி பொதுக் கூட்டத்தில் அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் குற்றச்சாட்டு...

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்...இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

கோடை விடுமுறையை முன்னிட்டு, கொடைக்கானல், நீலகிரியில் குவிந்த மக்கள்...செல்பி எடுத்தும், படகு சவாரி செய்யும் மகிழ்ச்சி...

ஐ.பி.எல். தொடரின் 37வது லீக் போட்டியில், குஜராத் அணி அபார வெற்றி...பஞ்சாப் அணியை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்...


Next Story

மேலும் செய்திகள்