இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21-04-2023)

x

ஆரூத்ரா மோசடி வழக்கில் காவல் துறையினர் அனுப்பிய சம்மனை எதிர்த்து நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ் வழக்கு....போலீசார் பதிலளிக்கும் வரை சம்மனுக்கு தடை விதிக்க வேண்டும் எனற சுரேஷின் கோரிக்கை நிராகரிப்பு...

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில், மேலும் 2 பேர் கைது.......செந்தாமரை, சந்திர கண்ணன் ஆகிய 2 பேரை கைது செய்தது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ்....

நேரடியாக அரசியல் களத்தில் குதிக்கிறாரா நடிகர் விஜய்? நிர்வாகிகளிடம் தொகுதி வாரியாக விவரங்களைக் கேட்கும் விஜய் மக்கள் இயக்கம்...

ஓ.பி.எஸ் தரப்பில் கோலார் தங்கவயல், புலிகேசி நகரில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிப்பு....கோலார் தொகுதியில் ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் சுயேட்சையாக போட்டியிட வாய்ப்பு அளிப்பதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு...

திருச்சியில் ஓபிஎஸ் அணி சார்பில் முப்பெரும் விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்...ஈபிஎஸ் அணியின் எச்சரிக்கையையும் மீறி, அதிமுகவின் கொடிகளுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மாநாட்டு ஏற்பாடுகள்...

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில், ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் நிறைவு...வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைப்பு..

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு...தூத்துக்குடி மற்றும் சேலத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழப்பு...

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளதாக தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்...தமிழகத்தில் கொரோனா கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளை அதிகரிக்க அறிவுறுத்தல்...

சூடானில் சிக்கி உள்ள இந்தியர்களுக்கு, சாத்தியம் உள்ள அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும்...அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்...

இஸ்லாமியர்களுக்கு தாயன்போடு பரிந்து காக்கக்கூடிய அரசாக திராவிட மடல் அரசு செயல்பட்டு வருகிறது....


Next Story

மேலும் செய்திகள்