இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (09-03-2023)

x

என்.எல்.சி நிர்வாகம், நிலங்களை சமன்படுத்தும் பணிகளை மேற்கொள்ள எதிர்ப்பு....சேத்தியாதோப்பு அருகே, பணிகளை தடுத்து நிறுத்திய பாமகவினர் கைது....

அமைச்சர்களின் ஊழல் பட்டியலை, ஏப்ரல் 14ம்தேதி வெளியிடப் போவதாக அண்ணாமலை அறிவிப்பு...டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ தகவல்...

ஒரே மின்இணைப்பு தொடர்பாக எந்த சுற்றறிக்கையும் அனுப்பவில்லை.....அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்...

குரூப்- 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு....தேர்வு எழுதிய லட்சக்கணக்கானோர் டுவிட்டரில் ட்ரெண்டிங் செய்த நிலையில் தகவல்....

"ஜகஜால கில்லாடி" படத் தயாரிப்புக்காக வாங்கிய 4 கோடி ரூபாயை திருப்பிச் செலுத்தாத விவகாரம்....நடிகர் சிவாஜியின் மகன் ராம்குமார், பேரன் துஷ்யந்த் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.....

உதகை அரசு பள்ளியில், அதிக சத்து மாத்திரை சாப்பிட்டு சிகிச்சையில் இருந்த மாணவி உயிரிழப்பு....மேல்சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வரும் போது, வழியிலேயே மூச்சுத்திணறி பலி....

பரமக்குடியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றம்....அதிமுக கவுன்சிலர் உள்பட 5 பேர் கைதாகி உள்ள நிலையில், டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு.....

ஆன்லைன் ரம்மி விளையாட்டு, நாடு முழுவதும் தடை செய்யப்பட வேண்டிய ஒன்று....முதலில் தமிழ்நாடு அதனை முன்னெடுப்பதாக, அமைச்சர் ரகுபதி பெருமிதம்....

புதிய சட்டம் உருவாக்க தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லையென கூறுவதை ஏற்க முடியாது....நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, அமைச்சர் ரகுபதி விளக்கம்.....

ஆன்லைன் ரம்மி விவகாரத்தில், ஆளுநரின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளித்துள்ளது, தமிழக அரசு....வருகிற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்படும் என அமைச்சர் ரகுபதி தகவல்....

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்........ஆன்லைன் ரம்மி விவகாரம், பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் தொடர்பாக ஆலோசனை


Next Story

மேலும் செய்திகள்