இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (05-02-2023)
பொதுக்குழு உறுப்பினர் அளிக்கும் கடிதத்தை நாளை காலை டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிப்பு....அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தகவல்....
அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகனின் நடவடிக்கை உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு முரணானது...பொது வேட்பாளர் விவகாரத்தில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டு...
ஓபிஎஸ் அணி காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுவதாக வைகைச்செல்வன் குற்றச்சாட்டு....இரட்டை இலை சின்னத்தை முடக்க ஓபிஎஸ் தரப்பு முயற்சிப்பதாக ராஜன்செல்லப்பா புகார்....
பொதுவேட்பாளர் தேர்வு குறித்து தனக்கு, இதுவரை எந்த சுற்றறிக்கையும் வரவில்லை...அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயன் ஆதங்கம்...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், பொது வேட்பாளராக தென்னரசு அறிவிக்கப்பட்டதை ஏற்க முடியாது...சென்னையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு...
அதிமுக பொதுவேட்பாளர் தேர்வு விவகாரத்தில், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறிவிட்டதாக ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டு...சட்டத்திற்கு புறம்பான செயலை ஆதரிக்க முடியாது என பண்ருட்டி ராமச்சந்திரன் திட்டவட்டம்....
காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் விதிமுறைகளில் தளர்வுகள் வழங்க வேண்டும்...பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தல்...
திருவாரூர் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு பந்தக் கால் முகூர்த்தம் கோலாகலம்...
அரசு மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம்...30 குண்டுகள் முழங்க காவலர்கள் இறுதி மரியாதை...
திருப்பூர் மாவட்டம், சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விமரிசையாக நடைபெற்ற தைப்பூச தேரோட்டம்...ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்....
மறைந்த பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி...
இயக்குனரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் உடல் நலக்குறைவால் உயிரிழப்பு...திரையுலகினர், பிரபலங்கள் அஞ்சலி...
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மரணம்...
துபாய் மருத்துவமனையில், நீண்ட நாட்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், உயிரிழந்ததாக தகவல்...