இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (06-07-2023)

x
  • அவதூறு வழக்கில், 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கு....குஜராத் உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது......
  • செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையிடம் வாய் திறந்தால் திமுக ஆட்சிக்கு ஆபத்து.....ஆட்சியை காப்பாற்றவே, செந்தில்பாலாஜி காப்பாற்றப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
  • செந்தில் பாலாஜி வழக்கில் எதையும் மறைக்காமல், அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்........அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு....
  • செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது 3வது நீதிபதியின் விசாரணையை தள்ளிவைப்பு....எப்போது விசாரணை என்பதை நாளை பட்டியலிடுமாறு உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவு...
  • ஒ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என நீதியரசர் கூறியிருக்கிறார்....உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி...
  • நாட்டில் நியாயமும், தர்மமும் இன்னும் உள்ளது என்பதற்கு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பே சாட்சி....தேர்தல் நேரத்தில் ஏராளமான முறைகேடுகளில் ஓ.பி.ரவீந்திரநாத் தரப்பு ஈடுபட்டதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு.....
  • ஓ.பி.ரவீந்திரநாத்தின் சொத்து விவரங்கள் குறித்து தேர்தல் அதிகாரி முறையான விசாரணை செய்யவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் சாடல்....அசையும் சொத்துகள், ரியல் எஸ்டேட் மூலம் கிடைத்த வருமானம், வாணி ஃபேப்ரிக்ஸ் நிறுவன பங்குகள் போன்றவற்றை வேட்பு மனுவில் காட்டாமல் மறைத்ததாக தீர்ப்பில் தகவல்...
  • ஓ.பி. ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்ய ஏதுவாக வெற்றி செல்லாது என்ற உத்தரவு 30 நாட்கள் நிறுத்தி வைப்பு....சென்னை உயர்நீதிமன்றம் ஆணை....
  • 2019 மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியில் ஓ.பி. ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு....
  • சந்திரயான்-3 விண்கலம் வரும் 14ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவிப்பு....ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இறுதிகட்ட பணிகள் தீவிரம்....
  • 290-க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட ஒடிசா ரயில் விபத்து தொடர்பான பரபரப்பு விசாரணை அறிக்கை வெளியானது....ரயில் விபத்துக்கு சிக்னல் மற்றும் தொலைதொடர்பு பிரிவின் அலட்சியமே பிரதான காரணம் என அதிர்ச்சி தகவல்....
  • ராஜ்பவனில் கோப்புகளை பெற்றுக் கொண்டு, அதற்கான ஒப்புதலும் அளித்துவிட்டு தற்போது கோப்புகளே வரவில்லை என்று மறைப்பதா?... அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளில் இசைவாணை வழங்குவதை மேலும் தாமதிக்க கூடாது என ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி மீண்டும் வலியுறுத்தல்....
  • அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு தொடர்பாக அரசிடம் இருந்து எந்தவித ஆவணங்களும் வரவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தகவல்....முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்கில், முறையாக அங்கீகரிக்கப்பட்ட நகலை அரசு அளிக்காததால் முடிவெடுக்க முடியாத நிலை உள்ளதாக பதில்....

Next Story

மேலும் செய்திகள்