இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (05-03-2023)

x

தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவராக இருந்த நிர்மல் குமார் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்...உண்மையாக நேர்மையாக உழைத்தேன், வேதனை மட்டுமே மிச்சம் என டிவிட்டரில் பதிவு... அண்ணாமலை வாழ்த்து...

ஹோலி பண்டிகை கொண்டாட சொந்த மாநிலங்களுக்கு குடும்பத்துடன் செல்லும் வட மாநிலத்தவர்கள்....சேலம் வழியாக பீகார் செல்லும் ரயிலில் கடும் கூட்ட நெரிசல்...

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பான அறிக்கையில் தவறான தகவலை பரப்பும் வகையில் கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு..பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு...

இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்...ஈரோட்டில் வடமாநிலத்தவர்கள் கூட்டாக பேட்டி...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்தரங்கம்...திமுக மற்றும் கூட்டணி அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்பு...

கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய 20,000க்கும் மேற்பட்ட பொருட்கள்...அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள் குறித்து முதல்வரிடம் அதிகாரிகள் விளக்கம்...

சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்...2 ஏக்கர் பரப்பளவில் ரூ.18.43 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்...

தமிழகத்தில் 22 மாத திமுக ஆட்சியில் எந்த பயனையும் மக்கள் பெறவில்லை...ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் பேச்சு...

விவசாயிகள், மீனவர்கள், தொழில் மற்றும் வர்த்தகர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்...தொழில் வர்த்தக சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி...

தென்மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை....தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் பங்கேற்பு...

வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசு எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் திருப்தியளிக்கும் வகையில் உள்ளன...தமிழகம் வந்துள்ள பீகார் குழு தகவல்...

சமூக ஊடகங்கள் மூலமாக சாதி மோதல்களை தூண்டும் வகையில் செயல்படுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்...காவல்துறையினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்...

"அரசின் நடவடிக்கை திருப்தி.."பீகார் குழுவின் அடுத்தக்கட்ட நகர்வு?



Next Story

மேலும் செய்திகள்