இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (05-02-2023)
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு...தாக்கல் செய்யப்பட்ட 96 பேரின் வேட்பு மனுக்கள் மீது நாளை பரிசீலனை...
வரும் பிப்ரவரி 10ஆம் தேதி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம்...10ம் தேதி மாலை வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்...
"ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியில்லை"... குக்கர் சின்னம் ஒதுக்காததால் முடிவு என, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவிப்பு...
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் தொண்டர்களை ஏமாற்றும் துரோக சக்தியை மக்கள் மன்றத்தில் தோலுரித்துக் காட்டுவோம் என, தொண்டர்களுக்கு டி.டி.வி.தினகரன் கடிதம்...தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தி.மு.க. மீதும் குற்றச்சாட்டு...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் - அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்பு மனு தாக்கல்...வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று மனுவைத் தாக்கல் செய்தார்...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாஜக முழு ஆதரவு...பொது நலன், கூட்டணியின் நன்மை கருதி வேட்பாளரை வாபஸ் பெற்றிருக்கும் ஓபிஎஸ்க்கு நன்றி என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை...
ஈபிஎஸ், ஓபிஎஸ் சந்திக்க வாய்ப்பே இல்லை என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்...திமுகவின் பி டீமாக செயல்படுகிறார்...கட்சி தலைமை அலுவலகத்தை சூறையாடியவர் தான் ஓபிஎஸ் என்றும் குற்றச்சாட்டு...
புதுமைப்பெண் - 2 ஆம் கட்ட திட்டத்தை நாளை துவக்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்...ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 347 மாணவிகள் பயன்பெற உள்ளதாக தகவல்...
திமுக ஆவடி மாநகர செயலாளர் ஆசிம்ராஜா விடுவிப்பு...ஆவடி மாநகர பொறுப்பாளராக சன் பிரகாஷ் நியமனம்..திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு...
ஓபிஎஸ் - இபிஎஸ் இணைவதால் நாட்டின் பொருளாதாரம் உயருமா என்றும், மக்கள் சுபிட்சம் அடைவார்களா என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி...
2014, 2019 பொதுத் தேர்தல்களில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருந்தாலும், மெத்தனப் போக்கிற்கு இடமளிக்கக் கூடாது...
மாநில ஆளுநர்கள் மத்திய அரசின் கருவியாக பயன்படுத்தப்படுகின்றனர்...
பட்ஜெட்டை மக்களிடம் கொண்டு