இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (03-07-2023)
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு...சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை... உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மோசடி பிரிவுடன் சேர்த்து ஊழல் தடுப்பு பிரிவு இந்த வழக்கில் சேர்ப்பு...
கையை இழந்த குழந்தையின் குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாய் வழங்க வேண்டும்..தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்...
குழந்தையின் கை அழுகிய விவகாரத்தில் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு பெற்றோருக்கு சம்மன்...விசாரணை அதிகாரி சம்மன் அனுப்பினார்...
குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் சந்தேகம் இருந்தால் தனியார் மருத்துவர்களை அழைத்து பரிசோதனை செய்யலாம்......தலையில் இருந்த நீரை அகற்ற சிகிச்சை செய்தபோது குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக ராஜீவ் காந்தி மருத்துவமனை டீன் தேரணி ராஜன் தகவல்....
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகிய விவகாரம்....அரசு நிச்சயம் பதில் கூற வேண்டும் என்று குழந்தையின் தாயார் கதறல்....
ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகிய விவகாரம் தொடர்பாக போலீசில் பெற்றோர் புகார்...சம்பந்தப்பட்ட செவிலியர், மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
சென்னையில் நாளை முதல் 82 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்....விரைவில் மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தகவல்....
அடுத்த 30 நாட்களுக்குள், சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் 90 சதவீதம் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெறும்...நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேட்டி...
ஆன்லைன் சூதாட்ட தடைக்கு எதிராக ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் சங்க கூட்டமைப்பு வழக்கு...இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு...
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, சென்னை அப்பலோ மருத்துவமனையில் மாதாந்திர உடல் பரிசோதனை...மருத்துவ பரிசோதனை முடிந்து, நாளை காலை வீடு திரும்புவார் என தகவல்...
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை சந்திக்கிறார் அமைச்சர் துரைமுருகன்...காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளையும் சந்தித்து தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்கிறார்
மேகதாது அணை பிரச்சனை குறித்து தக்க நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்கும் என்பது உறுதி...இந்தப் பிரச்சனையில் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம் என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை...
பொதுசிவில் சட்டத்துக்கு தி.மு.க , காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு...நாடாளுமன்ற நிலைகுழு கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் கட்சிகள் பங்கேற்கவில்லை என தகவல்...
ஜூலை 20ஆம் தேதி தொடங்குகிறது, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.....பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலேயே நடைபெறும் என அறிவிப்பு....