இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (02-07-2023)

x

சென்னையில் புதிய உச்சத்தை எட்டிய தக்காளி விலை...மொத்த விற்பனையில் கிலோ 100 ரூபாய்க்கும், சில்லறை விலையில் 130 முதல் 140 ரூபாய் வரையிலும் விற்பனை..

வளர்ந்த நாடுகளை எட்டிப் பிடிக்க ஒருவர் 16 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்...பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி...

தவறான சிகிச்சையே குழந்தையின் கை அகற்றப்பட்டதற்கு காரணம்...பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டு...

செவிலியர்களின் அலட்சியத்தால், ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகிய விவகாரம்...தவறு நடந்திருந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி...

குழந்தையின் வலது கையில் ரத்த உறைவை சரி செய்ய முயற்சிகள் எடுத்த போது பரவியதால் கையை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது...மருத்துவமனை விளக்கம்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், 2 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின், ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அகற்றம்...அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் தொடர் மருத்துவ கண்காணிப்பில் குழந்தை...

அரசியல் அரிச்சுவடி கூட தெரியாத தமிழக ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்...மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆவேசம்...

மதுரையில் 2026ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடம் திறக்கப்படும்...குமரியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதி...

தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தபோது, கெட்டதை கூட தைரியமாக செய்தேன் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்?...எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி...

வங்கக் கடலில் நிலவும் மேல் வளி மண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு...வரும் 6ம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

மேகதாது அணை விவகாரத்தில் முடிவு செய்ய வேண்டியது காவேரி மேலாண்மை வாரியமும், மத்திய அரசும்தான்‌...விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி...

மேகதாது அணை வரைவுத் திட்டத்திற்கு அங்கீகாரம் கொடுத்ததே பாஜக அரசு தான்....மேகதாது அணை விவகாரத்தில் பாஜக நாடகமாடுவதாக, அண்ணாமலைக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி

மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு நடந்து கொள்ள வேண்டும்...சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி...

கர்நாடகா அரசால் மேகதாதுவில் அணை கட்ட முடியாது... முதல்வருடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கை....தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்


Next Story

மேலும் செய்திகள்