18 வயது முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்வதாக கூறிபாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட +1 மாணவி

x

வேலூரில், ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, வேறோரு பெண்ணை திருமணம் செய்த நபரை கைது செய்யக்கோரி, ப்ளஸ் ஒன் மாணவி வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார்.

வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்திற்கு வந்த பள்ளி மாணவி, புகார் ஒன்றை அளித்தார். அதில், தாமரைக்கனி என்ற நபர், ஆசைவார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், 18 வயது முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு, தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தார். மேலும், இதுதொடர்பாக மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கவே, தாமரைக்கனியின் பெற்றோரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள தாமரைக்கனியை தேடி வருகின்றனர். இதனிடையே, தனது மகளை ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மாணவியின் தாய் போலீசாரிடம் கதறி அழுததை அடுத்து, அவரை போலீசார் சமாதானப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்